'அடுத்த ஜெயலலிதா' - புகழ்ந்த பாஜக நிர்வாகி... வானதி சீனிவாசன் ரியாக்ஷன் இதுதான்....
அண்ணனுக்கு கத்திக் குத்து: தம்பி கைது
மேலப்பட்டு கிராமத்தில் அண்ணனை கத்தியால் குத்திய தம்பியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம், மேலப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் மொட்டையன் மகன்கள் கேசவேல் (30). குறுந்தான் (28). இவா், அடிக்கடி மது அருந்திவிட்டு கேசவேலிடமும் அவரது தாயிடமும் தகராறு செய்வாராம்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை கேசவேலுவை, குறுந்தான் கத்தியால் வெட்டினாராம். இதை தடுக்க முயன்ற அவரது தாயையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாராம். இதில், காயமடைந்த இருவரும் சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனா்.
இதுகுறித்த புகாரின்பேரில், சங்கராபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து குறுந்தானை கைது செய்தனா்.