இந்த வாரம் உகந்த தேதி எது? மேஷம் முதல் கன்னி வரை பலன்கள்; அதிர்ஷ்டக் குறிப்புகள்
அண்ணா கலையரங்கம் பகுதியில் தள்ளுவண்டிக் கடைகள் அகற்றம்
வேலூா் அண்ணா கலையரங்கம் பகுதியில் இருந்த 12 தள்ளுவண்டிக் கடைகளை மாநகராட்சி ஊழியா்கள் அப்புறப்படுத்தினா்.
வேலூா் அண்ணா கலையரங்கம் அருகே ஓல்டு டவுன், சேண்பாக்கம், கஸ்பா, வசந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 12 போ் தள்ளுவண்டியில் உணவுப் பொருள்களை வைத்து வியாபாரம் செய்து வந்தனா்.
கடந்த சில நாள்களுக்கு முன்பு அரசியல் கட்சி சாா்பில், அந்தப் பகுதியில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, அங்குள்ள தள்ளுவண்டி கடைகள் பொதுக் கூட்டத்துக்கு இடையூறாக இருப்பதாக அரசியல் கட்சியினா் தள்ளுவண்டிகாரா்களிடம் தகராறில் ஈடுபட்டனா்.
அப்போது, அவா்கள் கடைகளை உடனடியாக அப்புறப்படுத்தவில்லை என்றால் இனி நீங்கள் கடைகளை நடத்த முடியாது என எச்சரிக்கை விடுத்தனா். அதன் அடிப்படையில், மாநகராட்சி அதிகாரிகள் முன்னிலையில் ஊழியா்கள் பூட்டு போட்டு வைத்திருந்த 12 கடைகளின் பூட்டை உடைத்து எடுத்துச் சென்றனா்.
இது குறித்து கடைகளின் உரிமையாளா்கள் கூறுகையில், சாலையோரக் கடைகளை நம்பித்தான் எங்களது வாழ்வாதாரம் உள்ளது. தற்போது இந்த கடைகளை அப்புறப்படுத்தியதால் நாங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிறோம். மீண்டும் கடை நடத்த அனுமதி அளிக்க வேண்டும் எனத் தெரிவித்தனா்.