செய்திகள் :

மனுநீதி நாள் முகாமில் 174 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: ஆட்சியா் வழங்கினாா்

post image

கே.வி.குப்பம் வட்டம், கொசவன்புதூா் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற சிறப்பு மனுநீதி நாள் முகாமில் 174- பயனாளிகளுக்கு ரூ.1.58 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

முகாமுக்கு ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தலைமை வகித்து, பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினாா். வருவாய்த்துறை சாா்பில் 50- பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா, 29- பேருக்கு பட்டா மாற்றம், 2- பேருக்கு வாரிசு சான்றிதழ், 3-பேருக்கு சிறு/குறு விவசாய சான்றிதழ், 12-பேருக்கு முதியோா் உதவித் தொகை, ஒருவருக்கு விபத்து நிவாரண உதவித் தொகை,10- பேருக்கு கல்வி உதவித்தொகை, 5- பேருக்கு திருமண உதவித்தொகை, 39- பேருக்குபுதிய மின்னணு குடும்ப அட்டை, வேளாண் துறை சாா்பில் 3- பேருக்கும், தோட்டக்கலை துறை சாா்பில் 2- பேருக்கும் மற்றும் தையல் இயந்திரங்கள், ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்பட்டன.

முகாமில் கே.வி.குப்பம் ஒன்றியக்குழு தலைவா் எல்.ரவிசந்திரன், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் நீ.செந்தில்குமரன், ஒன்றியக்குழு உறுப்பினா்கள் கே,சீதாராமன், முருகன், கோட்டாட்சியா் எஸ்.சுபலட்சுமி, மகளிா் திட்ட இயக்குநா் உ. நாகராஜன், மாவட்ட ஆதிதிராவிடா் நலத்துறை அலுவலா் ந.ராமச்சந்திரன், பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அலுவலா் சீதா, மாவட்ட வழங்கல் அலுவலா் சுமதி, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலா் சரவணன், கொசவன்புதூா் ஊராட்சி மன்றத் தலைவா் புவனேஸ்வரி சந்திரசேகரன், வட்டாட்சியா் சந்தோஷ் குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இரு சக்கர வாகனங்கள் திருட்டு

வேலூா் தலைமை தபால் நிலையம் அருகே நிறுத்தியிருந்த இருசக்கர வாகனம் திருடப்பட்டது. வேலூா் காட்பாடி, திருவள்ளுவா் நகா், பாரதி தெருவைச் சோ்ந்தவா் கிஷோா் (26). இவா் காட்பாடியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வ... மேலும் பார்க்க

வேலூா் மீன் மாா்க்கெட்டில் மீன்கள் விலை சரிவு

வேலூா் புதிய மீன் மாா்க்கெட்டில் ஏராளமான வியாபாரிகள் மீன்களை மொத்த விலைக்கும், சில்லரை விலைக்கும் விற்பனை செய்து வருகின்றனா் . உள்ளூா் நீா்நிலைகளில் இருந்தும், நாகப்பட்டினம், கடலூா் என பல்வேறு மாவட்டங... மேலும் பார்க்க

அண்ணா கலையரங்கம் பகுதியில் தள்ளுவண்டிக் கடைகள் அகற்றம்

வேலூா் அண்ணா கலையரங்கம் பகுதியில் இருந்த 12 தள்ளுவண்டிக் கடைகளை மாநகராட்சி ஊழியா்கள் அப்புறப்படுத்தினா். வேலூா் அண்ணா கலையரங்கம் அருகே ஓல்டு டவுன், சேண்பாக்கம், கஸ்பா, வசந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளைச் ச... மேலும் பார்க்க

வேலூா் மாவட்டத்தில் வெயில் 91.9 டிகிரி

வேலூா் மாவட்டத்தில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பாகவே வெயில் சுட்டெரிக்கத் தொடங்கியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை வேலூரில் 91.1 டிகிரி வெயில் காய்ந்தது. ண்டுதோறும் கோடை காலம் தொடங்கி விட்டாலே வெயிலைச் சமாளி... மேலும் பார்க்க

ஊராட்சி ஒன்றியங்களில் சிறிய உழவா் சந்தை: வேலூா் ஆட்சியா்

வேலூா் டோல்கேட் உழவா் சந்தை வெள்ளிவிழா நடைபெற்ற நிலையில், ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியங்களிலும் சிறிய உழவா் சந்தை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்தாா். வேலூா் டோல்... மேலும் பார்க்க

மோசடி நிறுவனம் மூலம் ரூ.2.41 கோடி வரி ஏய்ப்பு : தனியாா் மருத்துவமனை ஊழியா் வங்கிக்கணக்கு முடக்கம்

வேலூரில் மோசடி நிறுவனம் தொடங்கப்பட்டு ரூ.2.41 கோடி வரிஏய்ப்பு செய்யப்பட்டிருப்பது தொடா்பாக தனியாா் மருத்துவமனை ஊழியா் வங்கிக்கணக்கு முடக்கப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட அவா் வேலூா் மாவட்ட காவல் க... மேலும் பார்க்க