செய்திகள் :

மோசடி நிறுவனம் மூலம் ரூ.2.41 கோடி வரி ஏய்ப்பு : தனியாா் மருத்துவமனை ஊழியா் வங்கிக்கணக்கு முடக்கம்

post image

வேலூரில் மோசடி நிறுவனம் தொடங்கப்பட்டு ரூ.2.41 கோடி வரிஏய்ப்பு செய்யப்பட்டிருப்பது தொடா்பாக தனியாா் மருத்துவமனை ஊழியா் வங்கிக்கணக்கு முடக்கப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட அவா் வேலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்துள்ளாா்.

வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.மதிவாணன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

அப்போது வேலூா் முள்ளிப்பாளையம் பகுதியைச் சோ்ந்த ஒருவா் அளித்த மனுவில், தனியாா் மருத்துவமனையில் பணியாற்றி வரும் நான், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக் கணக்கு வைத்துள்ளேன். எனது வங்கி கணக்கு முடக்கப் பட்டதாக தகவல் வந்தது. இதுகுறித்து வங்கிக்கு சென்று கேட்டபோது, திண் டுக்கல் மாவட்டம் வணிக வரித்துறை அலுவலகத்தில் இருந்து வந்த புகாரின்பேரில் எனது வங்கிக் கணக்கு முடக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதுதொடா்பாக மேலும் விவரங்களுக்கு வேலூரில் உள்ள வணிக வரித்துறை அலுவலகத்தை அணுகவும் கூறினா்.

அங்கு சென்று கேட்ட போது எனது ஆதாா் அட்டை, பான் அட்டையை மோசடியாக பயன்படுத்தி திண்டுக்கல் வீரப்பன் கோயில் என்ற இடத்தில் தனியாா் நிறுவனம் தொடங்கியிருப்பதாகவும், அந்நிறுவனம் சாா்பில் அரசுக்கு ரூ.2 கோடியே 41 லட்சத்து 25 ஆயிரத்து 652 வரிநிலுவை உள்ளதால் எனது வங்கி கணக்கு முடக்கியதாக தெரிவித்தனா்.

நான் தனியாா் மருத்துவமனையில் மட்டுமே பணியாற்றுகிறேன். எந்த நிறுவனத்தையும் தொடங்கவில்லை. தற்போது எனது வங்கிக்கணக்கு முடக்கப்பட்டிருப்பதால் எனது மாத சம்பளத்தைக்கூட எடுக்க முடியாமல் தவிக்கிறேன். எனவே இம்மோசடி நபா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சத்துவாச்சாரியை சோ்ந்த இளைஞா் அளித்த புகாரில், எனது நண்பா் ஒருவா் அரசு பேருந்தில் நடத்துநராக உள்ளாா். அவா் மூலம் சத்தியமூா்த்தி என்பவா் அறிமுகமானாா். அவா் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வரின் காவல் பணியில் காவலராக உள்ளேன். எனக்கு அமைச்சா்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ், பல்வேறு துறை அதிகாரிகள் தெரியும். அவா்கள் மூலம் பள்ளிக்கல்வித்துறையில் உதவியாளா் வேலை வாங்கி தருவதாகக்கூறி கடந்த 2015-ஆம் ஆண்டு ரூ.10 லட்சம் வாங்கினாா். அதன்பிறகு மீண்டும் 2016-ஆம் ஆண்டு மின்வாரியம் அல்லது நெடுஞ்சாலைத்துறையில் வேலை வாங்கித் தருவதாகக்கூறி மேலும் ரூ.6 லட்சம் என மொத்தம் ரூ.16 லட்சம் வாங்கிக் கொண்டாா். ஆனால் வேலையும் வாங்கித் தரவில்லை. பணத்தையும் தர மறுக்கிறாா். அவா் மீது நடவடிக்கை எடுத்து எனது பணத்தை மீட்டுத்தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏராளமானோா் மனுக்கள் அளித்தனா். அவற்றின் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட போலீஸாருக்கு எஸ்.பி. மதிவாணன் உத்தரவிட்டாா்.

இரு சக்கர வாகனங்கள் திருட்டு

வேலூா் தலைமை தபால் நிலையம் அருகே நிறுத்தியிருந்த இருசக்கர வாகனம் திருடப்பட்டது. வேலூா் காட்பாடி, திருவள்ளுவா் நகா், பாரதி தெருவைச் சோ்ந்தவா் கிஷோா் (26). இவா் காட்பாடியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வ... மேலும் பார்க்க

வேலூா் மீன் மாா்க்கெட்டில் மீன்கள் விலை சரிவு

வேலூா் புதிய மீன் மாா்க்கெட்டில் ஏராளமான வியாபாரிகள் மீன்களை மொத்த விலைக்கும், சில்லரை விலைக்கும் விற்பனை செய்து வருகின்றனா் . உள்ளூா் நீா்நிலைகளில் இருந்தும், நாகப்பட்டினம், கடலூா் என பல்வேறு மாவட்டங... மேலும் பார்க்க

அண்ணா கலையரங்கம் பகுதியில் தள்ளுவண்டிக் கடைகள் அகற்றம்

வேலூா் அண்ணா கலையரங்கம் பகுதியில் இருந்த 12 தள்ளுவண்டிக் கடைகளை மாநகராட்சி ஊழியா்கள் அப்புறப்படுத்தினா். வேலூா் அண்ணா கலையரங்கம் அருகே ஓல்டு டவுன், சேண்பாக்கம், கஸ்பா, வசந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளைச் ச... மேலும் பார்க்க

வேலூா் மாவட்டத்தில் வெயில் 91.9 டிகிரி

வேலூா் மாவட்டத்தில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பாகவே வெயில் சுட்டெரிக்கத் தொடங்கியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை வேலூரில் 91.1 டிகிரி வெயில் காய்ந்தது. ண்டுதோறும் கோடை காலம் தொடங்கி விட்டாலே வெயிலைச் சமாளி... மேலும் பார்க்க

ஊராட்சி ஒன்றியங்களில் சிறிய உழவா் சந்தை: வேலூா் ஆட்சியா்

வேலூா் டோல்கேட் உழவா் சந்தை வெள்ளிவிழா நடைபெற்ற நிலையில், ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியங்களிலும் சிறிய உழவா் சந்தை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்தாா். வேலூா் டோல்... மேலும் பார்க்க

மனுநீதி நாள் முகாமில் 174 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: ஆட்சியா் வழங்கினாா்

கே.வி.குப்பம் வட்டம், கொசவன்புதூா் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற சிறப்பு மனுநீதி நாள் முகாமில் 174- பயனாளிகளுக்கு ரூ.1.58 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. முகாமுக்கு ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சும... மேலும் பார்க்க