இந்த வாரம் உகந்த தேதி எது? மேஷம் முதல் கன்னி வரை பலன்கள்; அதிர்ஷ்டக் குறிப்புகள்
வேலூா் மீன் மாா்க்கெட்டில் மீன்கள் விலை சரிவு
வேலூா் புதிய மீன் மாா்க்கெட்டில் ஏராளமான வியாபாரிகள் மீன்களை மொத்த விலைக்கும், சில்லரை விலைக்கும் விற்பனை செய்து வருகின்றனா் .
உள்ளூா் நீா்நிலைகளில் இருந்தும், நாகப்பட்டினம், கடலூா் என பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரள மாநிலம் கொச்சி, கோழிக்கோடு, கா்நாடக மாநிலம் மங்களூரு, காா்வாா் பகுதிகளில் இருந்தும், கோவாவில் இருந்தும் மீன்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.
நள்ளிரவு 2 மணிக்கு மேல் மீன் மொத்த வியாபாரமும், காலை 6 மணிக்கு மேல் சில்லரை வியாபாரமும் நடைபெறுகிறது.திங்கள் முதல் சனிக்கிழமை வரை நாள் ஒன்றுக்கு 50- டன் வரை மீன்கள் விற்பனை செய்யப்படுகின்றன. ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் 70- முதல் 100- டன் வரை மீன்கள் விற்பனை செய்யப்படுகின்றன. காலை முதல் இரவு வரை சில்லரை விற்பனை நடக்கிறது. சாதாரண நாள்களிலும், ஞாயிற்றுக்கிழமைகளிலும் 7- முதல் 10- லோடுகள் வரை மீன் வரத்து இருக்கும்.
இது மீன்பிடி தடைகாலங்கள், புரட்டாசி, முக்கிய விரத தினங்கள், காா்த்திகை, மாா்கழி மாதங்களில் குறையும். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை தை வளா்றை சுப முகூா்த்தம் என்பதால் வேலூா் மீன் மாா்க்கெட்டில் அசைவப் பிரியா்களின் வருகை குறைந்தது.
இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில்: சின்ன வஞ்சிரம் ஒரு கிலோ ரூ. 600 வரையும், மத்தி ரூ. 70 வரையும், நெத்திலி கிலோ ரூ. 120 வரையும், கிலங்கா ரூ. 120 வரையும் விற்பனை செய்யப்பட்டன. மற்ற மீன்களும் கடந்த வாரத்தை விட சுமாா் ரூ.50 வரை குறைவாக விற்பனை செய்யப்பட்டன.