முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வருக்கு நன்றி தெரிவித்த கமல்ஹாசன்
``அதிமுக சிதைந்துவிடக் கூடாது என்று நட்புணர்வுடன் சொல்கிறோம்'' - திருமாவளவன் சொல்வது என்ன?
2026 சட்டமன்ற தேர்தலுக்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய விசிக தலைவர் தொல்.திருமாவளவனிடம் அதிமுக- பாஜக கூட்டணி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், "பாஜக - அதிமுக கூட்டணியை உடைக்க வேண்டும் என்பது என்னுடைய நோக்கம் அல்ல.
அதிமுக ஒரு திராவிட இயக்கம். பெரியார் கொள்கைகளைப் பேசக்கூடிய இயக்கம்.
எம்.ஜி.ஆர் ஜெயலலிதா போன்ற தலைவர்களை முன்னிறுத்தி இயங்குகின்ற ஒரு இயக்கம் என்பதால் சில கருத்துகளை நட்புணர்வோடுதான் நாங்கள் முன்வைக்கிறோம்.
அதிமுக சிதைந்து விட கூடாது என்ற நோக்கத்தில்தான் சொல்கிறோம். அது தேவையற்றது என்றால் இனி பேசப்போவதில்லை" என்று தெரிவித்திருக்கிறார்.