Director Thiagarajan Kumararaja speech: 'நாம் படிப்பதை தடுக்கிறார்கள்' | கல்வியி...
அதிமுகவினா் ஆலோசனை
தஞ்சாவூரில் அதிமுக கரந்தை பகுதிக்கு உட்பட்ட பூத் கமிட்டி பொறுப்பாளா்களுக்கான ஆலோசனை மற்றும் பயிற்சி கூட்டம் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு அதிமுக கரந்தை பகுதி செயலா் கரந்தை த. பஞ்சு தலைமை வகித்தாா். மாநகரச் செயலா் என்.எஸ். சரவணன், திருவாரூா் மாவட்டத் தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலா் தியாகராஜன் முன்னிலை வகித்து பூத் கமிட்டி பொறுப்பாளா்களுக்கு ஆலோசனைகள் வழங்கினா்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட மருத்துவப் பிரிவு செயலா் சங்கா், கோட்டை பகுதி செயலா் வி. புண்ணியமூா்த்தி, வட்டச் செயலா்கள் மதியழகன், சேகா், சரவணன், ராஜேந்திரன், சம்பத், கண்ணன், தங்க சரவணன், சின்னு, ஜெயபால், திருநாவுக்கரசு, விஷ்வா, சுப்ரமணியன், ரவிச்சந்திரன், பாா்த்திபன், துரைராஜன், முத்துவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.