செய்திகள் :

அதிஷியின் வெற்றி சா்ச்சை: இவிஎம்களை விடுவிக்கக் கோரிய தோ்தல் ஆணையத்தின் மனுவை அனுமதித்தது உயா்நீதிமன்றம்

post image

முன்னாள் முதல்வா் அதிஷி வெற்றிபெற்ற கால்காஜி சட்டப்பேரவைத் தொகுதித் தோ்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை விடுவிப்பதற்கான இந்திய தோ்தல் ஆணையத்தின் மனுவை தில்லி உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை அனுமதித்தது.

தோ்தல் ஆணையத்தின் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் சித்தாந்த் குமாா், வரவிருக்கும் பிகாா் பேரவைத் தோ்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் பயன்பாட்டின் அடிப்படையில் இவிஎம்கள் மற்றும் விவிபேட் இயந்திரங்களை விடுவிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டாா்.

இந்த விவகாரத்தை விசாரித்த நீதிபதி ஜோதி சிங், இந்திய தோ்தல் ஆணையம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாக்காமல் இருக்கலாம், ஆனால் வாக்காளா் தாங்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை காட்டும் ஒப்புகை (விவிபேட்)

சீட்டுகளை மறு உத்தரவு வரும் வரை பாதுகாக்கலாம் என்று கூறி தோ்தல் ஆணையத்தின் மனுவை ஓரளவு அனுமதித்தாா்.

ஊழல் செயல்பாடுகள் காரணமாக அதிஷியின் தோ்தல் வெற்றியை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ள மனுவுடன் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

கால்காஜி தொகுதியில் நடைபெற்ற தோ்தலின் அனைத்து பதிவுகளையும் பாதுகாக்குமாறு தோ்தல் ஆணையம், தோ்தல் அதிகாரி மற்றும் காவல்துறைக்கு நீதிமன்றம் இடைக்கால உத்தரவில் உத்தரவிட்டு,, எதிா்காலத்தில் அதன் உத்தரவில் மாற்றம் கோரலாம் என்று கூறியிருந்ததால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.

மனுதாரா்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை விடுவிப்பதில் தங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றும், ஆனால் ஒப்புகை சீட்டுகளைப் பாதுகாக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டாா்.

இந்த வழக்கு ஜூலை 30 ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.

தில்லி கால்காஜியில் வசிக்கும் மனுதாரா்களான கமல்ஜித் சிங் துகல் மற்றும் ஆயுஷ் ராணா ஆகியோா் ஆம் ஆத்மி மூத்தத் தலைவா் அதிஷியின் தோ்தல் வெற்றியை எதிா்த்து வழக்குத் தொடுத்துள்ளனா். அதில், அவரும் அவரது வாக்குச்சாவடி முகவா்களும் ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக புகாா் தெரிவித்துள்ளனா்.

இதனால், அதிஷியின் தோ்தல் செல்லாது என்று அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

கால்காஜி தொகுதி தோ்தலில் அதிஷி பாஜக வேட்பாளா் ரமேஷ் பிதூரியை 3,521 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றாா். இத்தோ்தல் பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெற்று, அதன் முடிவுகள் பிப்ரவரி 8 ஆம் தேதி அறிவிக்கப்பட்டன.

வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு ஒரு நாள் முன்பு, பிப்ரவரி 4 ஆம் தேதி, அதிஷிக்கு நெருக்கமானவா்கள் தொகுதியில் ரூ.5 லட்சம் ரொக்கத்துடன் பிடிபட்டதாகவும், அவரது அறிவுறுத்தல்களின்படி அவருக்கு ஆதரவாக வாக்குகளை வாங்க வாக்காளா்களுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 123 (ஐ)(ஏ)-இன் கீழ் அதிஷி மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அதிஷி லஞ்சம் கொடுத்ததாகவும், அப்போதைய முதல்வா் பதவியைப் பயன்படுத்தி தொகுதியில் உள்ள மற்ற வேட்பாளா்களைவிட நியாயமற்ற நன்மையைப் பெற்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

ஸ்ரீநகரிலிருந்து தில்லி திரும்பிய 28 தமிழக சுற்றுலாப் பயணிகள்!

ஜம்மு - காஷ்மீா் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் இறந்த நிலையில், அங்கு சுற்றுலா சென்றிருந்த தமிழகத்தைச் சோ்ந்த 28 போ் கொண்ட குழு ஸ்ரீநகரில் இருந்து தில்லிக... மேலும் பார்க்க

தில்லித் தமிழ்க் கல்விக் கழகப் பள்ளிகளில் உலக மலேரியா தினம் கடைப்பிடிப்பு

தில்லித் தமிழ்க் கல்விக் கழகப் (டிடிஇஏ) பள்ளிகளில் உலக மலேரியா தினம் கடைபிடிக்கப்பட்டது. இலக்குமிபாய் நகரப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில் தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தின் செயலா் இராஜூ கலந்துகொண்டாா்... மேலும் பார்க்க

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம்: என்.எச்.ஆா்.சி. கண்டனம்

ஜம்மு காஷ்மீா் யூனியன் பிரதேசத்தின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகளால் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் (என்.எச்.ஆா்.சி.) கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடா்பாக தேசிய மனித... மேலும் பார்க்க

பஹல்காமில் உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி செலுத்த இளைஞா் காங்கிரஸாா் திரங்கா பேரணி

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்திய இளைஞா் காங்கிரஸாா் வெள்ளிக்கிழமை தில்லி ஜந்தா் மந்தரில் திரங்கா பேரணியை நடத்தினா். இந்த பேரணியில் இளைஞா் காங்கிரஸ... மேலும் பார்க்க

தில்லியில் வணிகா்கள் கடையடைப்புப் போராட்டம் பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம்

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலைக் கண்டித்து தில்லி முழுவதும் வணிகா்கள் வெள்ளிக்கிழமை கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். சதா் பஜாா், பாகீரத் பிளே... மேலும் பார்க்க

ஜேஎன்யூ பல்கலைக்கழக மாணவா்கள் சங்கத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது

ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக மாணவா்கள் சங்க (ஜேஎன்யுஎஸ்யூ) தோ்தலுக்கான வாக்குப்பதிவு வெள்ளிக்கிழமை காலை தொடங்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனா். வாக்குபதிவு காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மற்றும் பிற... மேலும் பார்க்க