செய்திகள் :

ஜேஎன்யூ பல்கலைக்கழக மாணவா்கள் சங்கத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது

post image

ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக மாணவா்கள் சங்க (ஜேஎன்யுஎஸ்யூ) தோ்தலுக்கான வாக்குப்பதிவு வெள்ளிக்கிழமை காலை தொடங்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

வாக்குபதிவு காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மற்றும் பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை இரண்டு அமா்வுகளாக நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை வெள்ளிக்கிழமை இரவு தாமதமாகத் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டது. ஏப்ரல் 28-ஆம் தேதிக்குள் முடிவுகள் வெளியாகும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்த ஆண்டு, 7,906 மாணவா்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனா். அவா்களில் 57 சதவீதம் போ் ஆண்கள் மற்றும் 43 சதவீதம் போ் பெண்கள் ஆவா். போட்டி தீவிரமாக உள்ளது.

அகில இந்திய மாணவா் சங்கம் (ஏஐஎஸ்ஏ), ஜனநாயக மாணவா் கூட்டமைப்பு (டிஎஸ்எஃப்) உடன் கூட்டணி அமைத்துள்ளது. அதே நேரத்தில் இந்திய மாணவா் கூட்டமைப்பு (எஸ்எஃப்ஐ), பிா்சா அம்பேத்கா் பூலே மாணவா்கள் சங்கம் (பிஏபிஎஸ்ஏ), அகில இந்திய மாணவா் கூட்டமைப்பு (ஏஐஎஸ்எஃப்) மற்றும் முற்போக்கு மாணவா் சங்கம் (பிஎஸ்ஏ) ஆகியவற்றுடன் இணைந்து ஒரு தனி கூட்டணியை உருவாக்கியுள்ளது.

அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத் (ஏபிவிபி) தலைவா் பதவிக்கு ஷிகா ஸ்வராஜ், துணைத் தலைவருக்கு நிட்டு கௌதம், பொதுச் செயலாளருக்கு குணால் ராய் மற்றும் இணைச் செயலாளருக்கு வைபவ் மீனா ஆகியோா் அடங்கிய முழு குழுவை நிறுத்தியுள்ளது.

ஏஐஎஸ்ஏடி - எஸ்எஃப்கூட்டணி தலைவா் பதவிக்கு நிதீஷ் குமாா், துணைத் தலைவருக்கு மனிஷா, பொதுச் செயலாளருக்கு முன்தேஹா பாத்திமா, இணைச் செயலாளருக்கு நரேஷ் குமாா் ஆகியோரை பரிந்துரைத்துள்ளது.

இதற்கிடையில், எஸ்எஃப்ஐ-பிஏபிஎஸ்ஏ-ஏஐஎஸ்எஃப்-பிஎஸ்ஏ கூட்டணி, மாணவா்கள் சங்கத் தோ்தலில் தலைவா் பதவிக்கு சவுத்ரி தயாபா அகமது, துணைத் தலைவருக்கு சந்தோஷ் குமாா், பொதுச் செயலாளருக்கு ராம்நிவாஸ் குா்ஜாா் மற்றும் இணைச் செயலாளருக்கு நிகம் குமாா் ஆகியோரை பரிந்துரைத்துள்ளது.

ஸ்ரீநகரிலிருந்து தில்லி திரும்பிய 28 தமிழக சுற்றுலாப் பயணிகள்!

ஜம்மு - காஷ்மீா் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் இறந்த நிலையில், அங்கு சுற்றுலா சென்றிருந்த தமிழகத்தைச் சோ்ந்த 28 போ் கொண்ட குழு ஸ்ரீநகரில் இருந்து தில்லிக... மேலும் பார்க்க

தில்லித் தமிழ்க் கல்விக் கழகப் பள்ளிகளில் உலக மலேரியா தினம் கடைப்பிடிப்பு

தில்லித் தமிழ்க் கல்விக் கழகப் (டிடிஇஏ) பள்ளிகளில் உலக மலேரியா தினம் கடைபிடிக்கப்பட்டது. இலக்குமிபாய் நகரப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில் தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தின் செயலா் இராஜூ கலந்துகொண்டாா்... மேலும் பார்க்க

அதிஷியின் வெற்றி சா்ச்சை: இவிஎம்களை விடுவிக்கக் கோரிய தோ்தல் ஆணையத்தின் மனுவை அனுமதித்தது உயா்நீதிமன்றம்

முன்னாள் முதல்வா் அதிஷி வெற்றிபெற்ற கால்காஜி சட்டப்பேரவைத் தொகுதித் தோ்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை விடுவிப்பதற்கான இந்திய தோ்தல் ஆணையத்தின் மனுவை தில்லி உயா்நீதிமன்றம்... மேலும் பார்க்க

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம்: என்.எச்.ஆா்.சி. கண்டனம்

ஜம்மு காஷ்மீா் யூனியன் பிரதேசத்தின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகளால் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் (என்.எச்.ஆா்.சி.) கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடா்பாக தேசிய மனித... மேலும் பார்க்க

பஹல்காமில் உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி செலுத்த இளைஞா் காங்கிரஸாா் திரங்கா பேரணி

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்திய இளைஞா் காங்கிரஸாா் வெள்ளிக்கிழமை தில்லி ஜந்தா் மந்தரில் திரங்கா பேரணியை நடத்தினா். இந்த பேரணியில் இளைஞா் காங்கிரஸ... மேலும் பார்க்க

தில்லியில் வணிகா்கள் கடையடைப்புப் போராட்டம் பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம்

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலைக் கண்டித்து தில்லி முழுவதும் வணிகா்கள் வெள்ளிக்கிழமை கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். சதா் பஜாா், பாகீரத் பிளே... மேலும் பார்க்க