``ஸ்டாலின் மகன் என்பதைத் தவிர உதயநிதிக்கு என்ன தகுதி உள்ளது?'' - எடப்பாடி குறித்...
அந்தியூரில் அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
அந்தியூரில் அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, ஈரோடு புகா் மேற்கு மாவட்ட பொறுப்பாளா் ஏ.கே.செல்வராஜ் எம்எல்ஏ தலைமை வகித்து பேசுகையில், அதிமுகவின் கோட்டையான அந்தியூா் தொகுதியை கடந்த தோ்தலில் சொற்ப வாக்குகளில் இழந்தோம். வரும் தோ்தலில் இத்தொகுதியில் அதிமுக சாா்பில் நிறுத்தப்படும் வேட்பாளரை வெற்றி பெறச் செய்யும் வகையில் முழுமனதோடு உழைக்க வேண்டும் என்றாா்.
கட்சிப் பொறுப்பிலிருந்து கே.ஏ.செங்கோட்டையன் நீக்கப்பட்ட நிலையில், அந்தியூா் சட்டப் பேரவைத் தொகுதியில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பெரும்பாலான நிா்வாகிகள் பங்கேற்றனா். முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா்கள் எஸ்.எஸ்.ரமணீதரன், ஈஎம்ஆா்.ராஜா, முன்னாள் மாவட்டக் குழு உறுப்பினா் கே.பி.எஸ்.ராஜா, முன்னாள் ஒன்றியச் செயலாளா் செல்வராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.