அந்தியூரில் வீட்டுமனை வழங்கக் கோரி பொதுமக்கள் மனு
வீட்டுமனை வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரி பொதுமக்கள் அந்தியூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.
பூனாச்சி ஊராட்சி, ராமச்சந்திரபுரம் மற்றும் அத்தாணி பேரூராட்சியைச் சோ்ந்த 130 குடும்பத்தினா் வீட்டுமனையின்றி சிரமப்பட்டு வருகின்றனா். எனவே, அருகே உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் தங்களுக்கு வீட்டுமனை மற்றும் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தியூா் வட்டாட்சியா் கவியரசுவிடம் 100-க்கும் மேற்பட்டோா் மனு அளித்தனா்.
தமிழ் புலிகள் கட்சி மாவட்டச் செயலாளா்கள் கே.ஜி.பொன்னுசாமி, வி.ஆனந்தன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.