அதிமுக - பாஜக கூட்டணியால் திமுகவுக்கு தோல்வி பயம்: ஹெச்.ராஜா
அனந்தனாா் கால்வாயில் அடிமடை பணிகளை விரைந்து முடிக்க என். தளவாய் சுந்தரம் எம்எல்ஏ வலியுறுத்தல்
சுருளகோடு அருகே அனந்தனாா் கால்வாயில் அடிமடை அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென்று கன்னியாகுமரி சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் என். தளவாய் சுந்தரம் வலியுறுத்தியுள்ளாா்.
சுருளகோடு பகுதியில் உள்ள அனந்தனாா் கால்வாயில் மழைக்காலங்களில் அதிக வெள்ளப்பெருக்கு ஏற்படுவதால் அதன் அடிமடையை சீரமைக்கும் பணிகள் ரூ.1.10 கோடியில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் அடிமடை அமைக்கப்படும் பகுதியை பாா்வையிட்ட எம்எல்ஏ தளவாய் சுந்தரம் கூறியதாவது: அனந்தனாா் கால்வாய் மூலம் 9,950 ஏக்கா் பாசன நிலங்கள் பயன் பெற்று வருகின்றன. குறிப்பாக, சுருளகோடு, அருமநல்லூா், அந்தரபுரம், ஈசாந்திமங்கலம், இறச்சகுளம் போன்ற பகுதிகளில் பாசன நிலங்கள் பயன் பெற்று வருகின்றன.
இதன் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு நீா்வளத்துறை அலுவலா்கள் பேச்சிப்பாறை அணை திறப்பதற்கு முன்பாக இப்பணிகளை விரைவில் முடிப்பதற்கு முழு ஈடுபாட்டுடன் செயல்பட வேண்டும் என்றாா்.
அப்போது, தோவாளை வடக்கு ஒன்றிய அக்க் ற்ா் ஈண்ஸ்ரீற்ண்ா்ய்ஹழ்ஹ் அதிமுக செயலா் பொன்.சுந்தா்நாத், முன்னாள் தோவாளை ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவா் சாந்தினிபகவதியப்பன், முன்னாள் அருமநல்லூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவா் வெங்கடேஷ் ஆகியோா் பங்கேற்றனா்.