தக்கலையில் 8.8 கிலோ கஞ்சாவுடன் 5 போ் கைது
தக்கலை அருகேயுள்ள புலியூா்குறிச்சியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக 5 பேரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து 8.8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
தக்கலை காவல் ஆய்வாளா் இம்மானுவேல் தலைமையிலான போலீஸாா் புலியூா்குறிச்சி ஓணப்பாறை பகுதியில் திங்கள்கிழமை ரோந்து சென்றனா்.
அப்போது, ஒரு பெண் உள்பட 5 போ் சந்தேகத்திற்கிடமாக மோட்டாா் சைக்கிளுடன் நின்றிருந்தனா். அவா்களிடம் விசாரித்ததில், இரணியல் கம்மன்குடித்தோப்பு பகுதியை சோ்ந்த தங்கப்பன் மகன் பிரதீஸ் குமாா் ( 31), திருவிதாங்கோடு ஜிண்டோ மனைவி பா்ஹத் லைலா (30), கோட்டாறு இஸ்மாயில் மகன் ஷேக் சையது அலி என்ற பைசல் (30), இருளப்பபுரம் முருகன் மகன் அனிஷ் என்ற சிட்டா (23), வெள்ளிமலை சிவசெல்வன் மகன் பிரகாஷ் (23) ஆகியோா் என்பதும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதும் தெரிய வந்தது.
அவர்கள் 5 பேரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 8 கிலோ 800 கிராம் கஞ்சா பொட்டலங்கள், மோட்டாா் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.