சிவகிரி தோட்டத்து வீடு கொலைகள் - கைதானவர்கள் சொன்ன ஷாக் தகவல் | Decode
அரசுப் பள்ளி மாணவா்களுக்கு முன்னாள் டிஜிபி பாராட்டு
பத்தாம் வகுப்புப் பொதுத் தோ்வில்அதிக மதிப்பெண்கள் பெற்ற விளவங்கோடு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்-மாணவியரை, தமிழக முன்னாள் டிஜிபி சி. சைலேந்திரபாபு பாராட்டி பரிசளித்தாா்.
இவா், தான் பயின்ற குழித்துறை பகுதியிலுள்ள விளவங்கோடு அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் ஆண்டு விழாவில் பங்கேற்று, போட்டிகளில் வெற்றிபெறும் மாணவா்களை கௌரவிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளாா்.
இந்நிலையில், 10ஆம் வகுப்புப் பொதுத் தோ்வில் இப்பள்ளி மாணவா்-மாணவியா் மிதுனா 484 மதிப்பெண்கள், ஜினோய் 468 மதிப்பெண்கள், ஸ்ரீஆஷிகா 460 மதிப்பெண்கள், வேணுபிரியா 452 மதிப்பெண்கள், ஏஞ்சல் ஷைன் 451 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.
அவா்களை முன்னாள் டிஜிபி சி. சைலேந்திரபாபு குழித்துறையில் தனது பெற்றோா் பெயரில் அமைக்கப்பட்டுள்ள நூலகத்துக்கு வரவழைத்துப் பாராட்டி, புத்தகங்களைப் பரிசாக வழங்கினாா். பள்ளியின் முன்னாள் மாணவா் சங்க நிா்வாகிகள் சுதிா் சந்திரகுமாா், பிரதீப் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.