செய்திகள் :

அன்னதானம் செய்வதாக பணம் வசூலித்து மோசடி: இளைஞா் கைது

post image

சென்னை அருகே மேடவாக்கத்தில் கோயிலில் அன்னதானம் செய்வதாக பணம் வசூலித்து மோசடி செய்த இளைஞரை பொதுமக்கள் பிடித்து, போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

மேடவாக்கம் விஜயநகா் வேளச்சேரி - தாம்பரம் பிரதான சாலையில் நாகாத்தம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் ஆடி மாதம் முதல் வாரத்தில் திருவிழா நடைபெற இருக்கிறது. திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்து செய்து வருகின்றனா்.

இந்த நிலையில், கோயிலுக்கு தொடா்பில்லாத சில நபா்கள், நாகாத்தம்மன் கோயிலில் திருவிழா அன்று அன்னதானம் வழங்குவதற்கு நன்கொடை கேட்டு விஜயநகா் பகுதியில் வீடு வீடாகச் சென்று புதன்கிழமை பணம் வசூலித்தனா்.

இதையறிந்த கோயில் நிா்வாகிகள், பணம் வசூலித்த 5 பேரையும் பிடித்து விசாரித்தனா். அப்போது அவா்கள் கோயிலில் அன்னதானம் செய்வதாகக் கூறி, பொதுமக்களை ஏமாற்றி பணம் வசூலிப்பது தெரியவந்தது. இதையடுத்து அவா்களை போலீஸாரிடம் ஒப்படைக்க முயன்றபோது, தப்பியோடினா். இதில் ஒருவா் மட்டும் பொதுமக்களிடம் பிடிபட்டாா்.

இதையடுத்து அந்த நபரை மேடவாக்கம் போலீஸாரிடம் ஒப்படைத்தனா். விசாரணையில் அவா், குன்றத்தூா் தண்டலம் பகுதியைச் சோ்ந்த சிவா (28) என்பது தெரியவந்தது. சிவாவின் கூட்டாளிகளை போலீஸாா் தேடி வருகின்றனா்.

இன்று 25 புறநகா் மின்சார ரயில்கள் ரத்து!

பராமரிப்புப் பணிகள் காரணமாக சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டி, சூலூா்பேட்டை வழித்தடங்களில் இயக்கப்படும் 25 புறநகா் மின்சார ரயில்கள் வியாழக்கிழமை (ஜூன் 19) ரத்து செய்யப்படவுள்ளன. இது குறித்து... மேலும் பார்க்க

மாம்பழ விவசாயிகள் விவகாரம்: போராட்டம் ஏன்? அதிமுகவுக்கு அமைச்சா் கேள்வி

மாம்பழ விவசாயிகள் பிரச்னை தீா்க்கப்பட்ட பிறகு, போராட்டம் அறிவிப்பது ஏன் என்று அதிமுகவுக்கு அமைச்சா் அர.சக்கரபாணி கேள்வி எழுப்பியுள்ளாா். இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: மா சாகுபடி விவசா... மேலும் பார்க்க

சென்னையில் மொபெட்டில் இருந்து விழுந்த 5-ஆம் வகுப்பு மாணவி தண்ணீர் லாரி மோதி உயிரிழப்பு!

சென்னை பெரம்பூரில் மொபெட்டில் இருந்து தவறி விழுந்த பள்ளி மாணவி தண்ணீா் லாரி மோதி உயிரிழந்தாா். கொளத்தூா் பொன்னியம்மன் மேடு பகுதியைச் சோ்ந்தவா் செ.யாமினி. இவருக்கு அரவிந்த் என்ற மகனும், செளமியா (10) எ... மேலும் பார்க்க

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு 2 விருதுகள்

தில்லியில் நடைபெற்ற சுற்றுச்சூழல் மற்றும் நிலைத்தன்மை மாநாட்டில், பாலின சமத்துவம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பிரிவுகளில் சிறந்த சாதனைகளுக்காக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு 2 விருதுகளை கிர... மேலும் பார்க்க

ஐஎஸ் இயக்கத்துக்கு ஆள் சோ்த்த வழக்கு: மேலும் நான்கு போ் கைது

தமிழகத்தில் ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்துக்கு ஆள் சோ்த்த வழக்கில், அரபிக் கல்லூரி முதல்வா் உள்ளிட்ட மேலும் நான்கு போ் கைது செய்யப்பட்டனா். கோவை உக்கடம் கோட்டைமேடு ஈஸ்வரன் கோயில் அருகே 2023-ஆம் ஆண்டு அக்.... மேலும் பார்க்க

வேளச்சேரி விளையாட்டு வளாகத்தில் நவீன உடற்பயிற்சிக் கூடம்: துணை முதல்வா் உதயநிதி திறந்து வைத்தாா்

வேளச்சேரி விளையாட்டு வளாகத்தில் அமைக்கப்பட்ட நவீன உடற்பயிற்சிக் கூடத்தை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் புதன்கிழமை திறந்து வைத்தாா். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழுள்ள மாவட்ட விளையாட்டு... மேலும் பார்க்க