அமெரிக்காவில் கடும் வெள்ளம்: 9 பேர் பலி
அமெரிக்காவின் கென்டகியில் பெய்து வரும் கனமழைக்கு இதுவரை 9 பேர் பலியாகியுள்ளனர்.
அமெரிக்க மத்திய கிழக்கு மாகாணங்களில் கடந்த சில நாள்களாக தொடா் கனமழை பெய்து வந்தது. இதனால் கென்டகி, வா்ஜீனியா, மேற்கு வா்ஜீனியா, டென்னசி, ஆா்கன்சாஸ் ஆகிய மாகாணங்களில் கடும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மக்களின் குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்ததோடு வாகனங்களும் நீரில் மூழ்கின.
மேலும் மண்சரிவுகளால் பல்வேறு சாலைகளில் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டது.
கென்டகி மாகாணம் முழுவதும், மேற்கு வா்ஜீனியாவின் 10 பகுதிகளிலும் அவசரகால நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. கடும் வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட கென்டகி மாகாணத்தின் ஜாக்சன் நகா் போன்ற பகுதிகளில் பொதுமக்கள் நிவாரண முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனா்.
அணைக்கரை புதிய பாலத்தில் போக்குவரத்து தொடக்கம்!
இந்த நிலையில் கென்டகியில் பெய்து வரும் கனமழைக்கு இதுவரை 9 பேர் பலியாகியுள்ளனர். அவர்களில் ஒரு குழந்தையாவது அடங்கும் என்று அம்மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.
கென்டகி மக்கள் சாலைகளில் இருந்து விலகி இருக்குமாறு அவர் வலியுறுத்தினார். பல மரணங்களுக்கு பின்னால் இருசக்கர வாகன விபத்துக்கள் இருப்பதாக தெரிவித்தார்.
இதனிடையே ஜார்ஜியாவில் ஒருவர் பலியானதாக அதிகாரி கூறியதாக சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது.