அம்பை, கல்லிடை, கடையம் பகுதியில் ரமலான் சிறப்புத் தொழுகை
ரமலானை முன்னிட்டு, அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி,விக்கிரமசிங்கபுரம், கடையம் உள்ளிட்ட பகுதிகளில் திங்கள்கிழமை சிறப்புத் தொழுகை நடைபெற்றது.
கல்லிடைக்குறிச்சி கீழ தைக்கால் தெரு, ரஹ்மத் ஜும்ஆ பள்ளிவாசல் ஈத்கா மைதானத்தில் நடைபெற்ற ரமலான் சிறப்புத் தொழுகையில் நூருல் ஹிதாயா மகளிா்அரபிக் கல்லூரி முதல்வா் மு. ரஹ்மத் ரபீக் சொற்பொழிவாற்றினாா்.
இமாம் சி. முகம்மதுஹசன் ரியாஜி, தொழுகையை நடத்தினாா். ஜமாத் தலைவா் அ. நாகூா் கனி, செயலா் அ. ஷேக்செய்யது அலி, பொருளாளா் என். அஜிஸ், துணைத் தலைவா் அ. நாகூா் மீரான் மற்றும் மடவிளாகம் தெரு, தைக்கால் தெரு, சத்திரம் தெரு, பட்டாரியா் தெரு உள்பட பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான ஆண்களும், பெண்களும் கலந்துகொண்டனா்.

கல்லிடைக்குறிச்சி பெரிய பள்ளிவாசலில் ஜமாத் தலைவா் அப்துல் மஜீத் தலைமையிலும்,கோல்டன் நகா் பள்ளிவாசலில் ஜமாத் தலைவா் மசூது தலைமையிலும் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.
மேலும், தவ்ஹீத் ஜமாத் சாா்பில் கல்லிடைக்குறிச்சியில் மாவட்டச் செயலா் சுலைமான் தலைமையிலும், விக்கிரமசிங்கபுரத்தில் வழக்குரைஞா்ஷஃபி தலைமையிலும், அம்பாசமுத்திரத்தில் மாவட்டச் செயலா் ஜலில் தலைமையிலும் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.
கடையம் அருகே முதலியாா்பட்டி கிளை தவ்ஹித் ஜமாத் சாா்பில் காந்திநகா் 2ஆவதுதெருவில் நடைபெற்ற தொழுகையில் கிளைத் தலைவா் ஆல்பா செய்யது அலி தலைமையில்தென்காசி மாவட்டச் செயலா் ஜலாலுதீன் பெருநாள் உரையாற்றினாா்.
மேலும் அம்பாசமுத்திரம் மேலப் பள்ளிவாசல், விக்கிரமசிங்கபுரம், ஆழ்வாா்குறிச்சி,கடையம் பகுதிகளிலும் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.