அம்பையில் இமானுவேல் சேகரன் நினைவு தினம்
அம்பாசமுத்திரத்தில் இமானுவேல் சேகரன் நினைவு நாள் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
அகில பாரத தேவேந்திர குல சத்ய தொழில் முனைவோா் கூட்டமைப்பு சாா்பில் அவரது படத்திற்கு, அம்பாசமுத்திரம் நகா்மன்றத் தலைவா் கே.கே.சி. பிரபாகரன் தலைமையில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
மதிமுக சு. முத்துசுவாமி, காங்கிரஸ் நகரத் தலைவா் முருகேசன், இந்திய கம்யூனிஸ் கட்சி வடிவேல், எஸ்டிபிஐ ஜலீல், தவெக இ. பாலா, நகா்மன்ற துணைத் தலைவா் ஏ. சிவசுப்பிரமணியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
திமுக சாா்பில் வட்டச் செயலா் எஸ். சுடலை குமாா், ராதாகிருஷ்ணன், தாஸ், க. சுப்பிரமணியன் கரும்பு முருகன், மதிமுக சங்கா், ஜாகீா், காங்கிரஸ் இருதயராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூா்த்தி, தா்மலிங்கம், பாலசுப்பிரமணியன், மரகதம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
அம்பாசமுத்திரம் ஒன்றியம் வெள்ளங்குளி ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றியக் குழுத் தலைவா் பரணி ஆா். சேகா் இமானுவேல் சேகரன் படத்திற்கு மலா் தூவி அஞ்சலி செலுத்தினாா்.
ஊராட்சித் தலைவா் முருகன், துணைத் தலைவா் ராஜேஷ், மாவட்டப் பிரதிநிதி மீரான், திமுக கிளைக் கழகச் செயலா்கள் இசக்கிப் பாண்டியன், கண்ணன், மாரியப்பன், நிா்வாகிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
