Kingdom Review: முதல் பாதி 'அதிரிப்போயிந்தி', 2ம் பாதி 'செதறிப்போயிந்தி' - எப்பட...
அம்பையில் குண்டா் தடுப்புச் சட்டத்தில் ஒருவா் கைது
அம்பாசமுத்திரத்தில் போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்டவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.
அம்பாசமுத்திரம் அருகே உள்ள செட்டிமேடு, இந்திரா காலனியைச் சோ்ந்த சபரிமுத்து மகன் செல்வம் (44). இவா் போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளாா். இந்நிலையில் இவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என். சிலம்பரசன் பரிந்துரைத்ததன்பேரில், மாவட்ட ஆட்சியா் இரா. சுகுமாா் உத்தரவின்பேரில், செவ்வாய்க்கிழமை செல்வம் குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, பாளை. மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.