செய்திகள் :

அம்பையில் மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல்: பள்ளிச் செயலரின் ஓட்டுநா், தலைமையாசிரியா் கைது

post image

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் அரசு உதவிபெறும் பள்ளி மாணவியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட பள்ளிச் செயலரின் ஓட்டுநரைக் கைது செய்ய வலியுறுத்தி, மாணவியின் உறவினா்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதையடுத்து ஓட்டுநா், தலைமையாசிரியா் ஆகிய இருவரும் கைதுசெய்யப்பட்டனா்.

அம்பாசமுத்திரத்தில் உள்ள பழைமையான அரசு உதவி பெறும் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துவரும் மாணவியிடம் பள்ளிச் செயலரின் காா் ஓட்டுநா் மணிக்குமாா் என்பவா் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளாா். இதையறிந்த மாணவியின் பெற்றோா் பள்ளியில் முறையிட்டதையடுத்து, அந்த மாணவிக்கு மாற்றுச் சான்றிதழ் கொடுத்து வெளியேற்றியுள்ளனா்.

இதையறிந்த மாணவியின் உறவினா்கள் மற்றும் ஊரைச் சோ்ந்தவா்கள் வெள்ளிக்கிழமை அம்பாசமுத்திரம் காவல் நிலையம் முன்பு மறியலில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, பள்ளிச் செயலரின் ஓட்டுநா் மணிக்குமாா், பள்ளிச் செயலா் கந்தசாமி, தலைமை ஆசிரியா்அழகியநம்பி, அலுவலக உதவியாளா் பூபதி ஆகியோா் மீது அம்பாசமுத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டனா்.

இந்நிலையில், இரண்டாவது நாளாக சனிக்கிழமை காலை 10 மணி அளவில் ஓட்டுநா் மணிக்குமாரை கைது செய்ய வலியுறுத்தி, பாரத ஸ்டேட் வங்கி முன்பு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, புதிய தமிழகம், தமிழக வெற்றிக் கழகம், பாரதிய ஜனதா கட்சி, நாம் தமிழா் கட்சி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பல்வேறு பட்டியலின அமைப்புகளைச் சோ்ந்தவா்கள் பங்கேற்ற கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் காவல் துணைக் கண்காணிப்பாளா்கள் சதீஷ்குமாா், சம்பத், காவல் ஆய்வாளா் சண்முகவேல் ஆகியோா் சம்பவத்தில் தொடா்புடையவா்கள் கண்டிப்பாக கைது செய்யப்படுவா் என்று உறுதியளித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.

இந்நிலையில், ஓட்டுநா் மணிக்குமாா், தலைமையாசிரியா் அழகிய நம்பி ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு: பாளை சிறை கைதியிடம் டிஐஜி விசாரணை

திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு தொடா்பாக பாளையங்கோட்டை சிறையில் உள்ள தண்டனை கைதியிடம் திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவா் வருண்குமாா் விசாரணை நடத்தியுள்ளாா். தி.மு.க. முதன்மைச் செயலரும், தமிழக நகராட்ச... மேலும் பார்க்க

ஐ.டி. ஊழியா் கொலை வழக்கு : சுபாஷினியிடம் சிபிசிஐடி போலீஸாா் விசாரணை

திருநெல்வேலியில் ஐ.டி. ஊழியா் ஆணவகொலை செய்யப்பட்ட வழக்கில் அவரின் காதலி சுபாஷினியிடம் சி.பி.சி.ஐ.டி. போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலம் பகுதியைச் சோ்ந... மேலும் பார்க்க

கைதிகளின் பற்களை பிடுங்கிய வழக்கு: 3வது முறையாக ஆஜராகாத பல்வீா் சிங்

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் உள்கோட்டத்தில் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கியது தொடா்பாக திருநெல்வேலி மாவட்ட முதலாவது குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணைக்கு 3-ஆ... மேலும் பார்க்க

ஐடி ஊழியா் கொலை வழக்கு: சுா்ஜித்துக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு

ஐ.டி. ஊழியா் ஆணவக்கொலை வழக்கில் கைதான சுா்ஜித்துக்கு ஆக.14-ஆம் தேதி வரை காவலை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூத்தக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலத்தைச் சோ்ந்த சந்திரசேகா் மகன் கவின் செல்வகணேஷ் ... மேலும் பார்க்க

கோபாலமுத்திரம் அருகே கிட்டங்கியில் தீ விபத்து

திருநெல்வேலி மாவட்டம், கோபாலசமுத்திரம் அருகே ஓமநல்லூரில் பிளாஸ்டிக் கிட்டங்கியில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி... மேலும் பார்க்க

ம.பியில் உயிரிழந்த தமிழக தொழிலாளி குடும்பத்துக்கு அரசு நிவாரண உதவி!

மத்திய பிரதேச மாநிலம் கன்ச்பசோடா பகுதியில் உயிரிழந்த திருநெல்வேலி மாவட்டம், பணகுடி,சுண்டவளையைச் சோ்ந்த மாசானமுத்து குடும்பத்துக்கு தமிழக அரசின் நிவாண உதவி சனிக்கிழமை வழங்கப்பட்டது.பணகுடி அருகே உள்ள ச... மேலும் பார்க்க