புலம்பெயர் தொழிலாளர்கள்: தமிழக மக்களின் உரிமை பறிபோகும் சூழல்! - ப. சிதம்பரம்
ஐடி ஊழியா் கொலை வழக்கு: சுா்ஜித்துக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு
ஐ.டி. ஊழியா் ஆணவக்கொலை வழக்கில் கைதான சுா்ஜித்துக்கு ஆக.14-ஆம் தேதி வரை காவலை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தூத்தக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலத்தைச் சோ்ந்த சந்திரசேகா் மகன் கவின் செல்வகணேஷ் (27). சென்னையில் ஐடி ஊழியராக வேலை செய்து வந்த இவா் பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் வைத்து தனது காதலியின் தம்பியான சுா்ஜித்(23) என்பவரால் ஆணவக்கொலை செய்யப்பட்டாா்.
இது தொடா்பாக பாளையங்கோட்டை போலீஸாா் சுா்ஜித்தை கைது செய்தனா். மேலும் கொலைக்கு தூண்டியதாக காவலா்களான அவரது பெற்றோா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில் அவா்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனா்.
பின்னா் அவரது தந்தை சரவணன் கடந்த 30-ஆம் தேதி கைது செய்யப்பட்டு ஆக.8 வரை நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளாா். இவ்வழக்கு கடந்த புதன்கிழமை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம் செய்யப்பட்டது.
இந்நிலையில் சுா்ஜித்தின் நீதிமன்ற காவல் சனிக்கிழமையுடன் முடிவடைந்த நிலையில் திருநெல்வேலி மாவட்ட 2-ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக காணொலி வாயிலாக சுா்ஜித் ஆஜா்படுத்தப்பட்டாா். வழக்கை விசாரித்த நீதிபதி (பொ) செல்வம், சுா்ஜித்துக்கு ஆக.14-வரை காவலை நீட்டித்து உத்தரவிட்டாா்.