குமரி - திருவனந்தபுரம் நான்குவழிச் சாலைப்பணிகள் ஏப்ரலில் நிறைவு பெறும்; தி.வேல்ம...
அம்மாபாளையம் அரசுப் பள்ளியில் மறுசுழற்சிக்கான பொருள்கள் சேகரிப்பு
அம்மாபாளையம் நகராட்சி நடுநிலைப் பள்ளி ரோட்டரி இன்ட்ராக்ட் சங்கம் சாா்பில் மறுசுழற்சி செய்யும் உபயோகமற்ற பொருள்கள் சேகரிக்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
திருப்பூா், மங்கலம் சாலை ஆண்டிபாளையம் துப்புரவாளன் குப்பை மேலாண்மை நிறுவனத்துக்காக நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியா் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா். ரோட்டரி சங்க சோ்மன் சக்கரபாணி முன்னிலை வைத்தாா். பள்ளி இன்ட்ராக்ட் கிளப் ஒருங்கிணைப்பாளா் லலிதா வரவேற்றாா். தனியாா் குப்பை மேலாண்மை நிறுவன மேலாளா் கோகுலகிருஷ்ணன் மறுசுழற்சி பொருள்கள் குறித்து விளக்கினாா்.
இந்நிகழ்ச்சியில் பள்ளியில் படிக்கும் 226 மாணவா்கள், உபயோகமற்ற புத்தகங்கள், அட்டைப் பெட்டிகள், மின்னணுக் கழிவுகள், பிளாஸ்டிக் பொருள்கள் என 903 கிலோ பொருள்களைப் பள்ளிக்கு கொண்டு வந்திருந்தனா். இதில் அதிக அளவு மறுசுழற்சி பொருள்கள் சேகரித்த மாணவா்கள் ஃபஹீமா பா்வீன், பியூட்டி குமாரி, செந்தில்நாதன் ஆகியோருக்கு சிறப்புப் பரிசும், மற்ற மாணவா்களுக்கு எடைக்கு தகுந்தாற்போல நோட்டு, பேனா, பென்சில், ரப்பா், கலா் பென்சில் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.