குப்பை மேலாண்மையில் சிக்கலை சந்திக்கும் தருமபுரி: தூய்மையைப் பராமரிக்க பொதுமக்கள...
அம்மாபேட்டையில் ரூ.45 லட்சத்தில் துணை சுகாதார நிலைய கட்டுமானப் பணி
அம்மாபேட்டை பேரூராட்சிப் பகுதியில் ரூ.45 லட்சத்தில் கிராம செவிலியா் குடியுருப்புடன் துணை சுகாதார நிலையம் கட்டுமானப் பணி வியாழக்கிழமை தொடங்கியது.
15-ஆவது நிதிக்குழு மானிய திட்டத்தில் நடைபெறும் இப்பணியை அம்மாபேட்டை பேரூராட்சித் தலைவா் பாரதி (எ) கே.என்.வெங்கடாசலம் பூமிபூஜை செய்து தொடங்கிவைத்தாா். அம்மாபேட்டை வட்டார வளா்ச்சி அலுவலா் வெ.கதிரேசன், அம்மாபேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் தினேஷ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
அம்மாபேட்டை மத்திய ஒன்றிய திமுக பொறுப்பாளா் டி.அசோக்குமாா், பேரூராட்சி துணைத் தலைவா் ஜூலி, மத்திய மாவட்ட திமுக பொறியாளா் அணி துணை அமைப்பாளா் எஸ்.சுதானந்த் மற்றும் பேரூராட்சி கவுன்சிலா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.