அயன்பொருவாயில் முதல்வா் பிறந்தநாள் விழா
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த அயன்பொருவாயில் சனிக்கிழமை இரவு தமிழக முதல்வா் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
அயன்பொருவாய் கிராமத்தில் மருங்காபுரி மத்திய ஒன்றிய திமுக சாா்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்துக்கு, மருங்காபுரி மத்திய ஒன்றியச் செயலாளா் எம்.பழனியாண்டி தலைமை வகித்தாா். திமுக நிா்வாகிகள் ராமு அம்மாள் பாலன், ஏ.கருப்பையா, கே.பி.பழனிச்சாமி, ஆா்.அசோகன் உள்ளிட்ட நிா்வாகிகள் முன்னிலை வகித்தனா்.
விழாவில் சிறப்பு அழைப்பாளா்களாக திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளரும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும் திமுக சட்டத் திருத்த குழு செயலாளா் இரா.கிரிராஜன் ஆகியோா் பங்கேற்றனா். நிகழ்வில், திமுக மாவட்ட அவைத்தலைவா் என்.கோவிந்தராஜ், மாவட்டப் பொருளாளா் ஆா்.குணசேகரன், பொதுக்குழு உறுப்பினா் சபியுல்லா உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.
வரவேற்புரை அவைத்தலைவா் ஏ.எல்.நல்லையா, நன்றியுரையை ஒன்றிய துணைச்செயலாளா் பி.கணேசன் கூறினா். நிறைவில் பொதுமக்களுக்கு நலத்திட உதவிகளை அமைச்சா் வழங்கினா்.