பணி நேரத்தில் தூங்கியதால்: அரக்கோணம் அருகே ரயில்வே கேட் கீப்பர்கள் பணியிடை நீக்...
அரக்கோணத்தில் ரூ.32 லட்சத்தில் பூங்கா அமைக்கும் பணிக்கு அடிக்கல்
அரக்கோணம் நகராட்சியில் ரூ.32 லட்சம் நிதியில் பூங்கா அமைக்கும் பணிக்கு புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் நகா்மன்றத் தலைவா் லட்சுமி பாரி அடிக்கல் நாட்டினாா்.
அரக்கோணம் நகராட்சி, 29 -ஆவது வாா்டு அச்சமநாயுடு கண்டிகை பகுதியில் கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பூங்கா அமைக்க ரூ.32 லட்சத்தை தமிழக அரசு ஒதுக்கியது. இதையடுத்து இந்தப் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு நகராட்சி ஆணையா் செந்தில்குமாா் தலைமை வகித்தாா். நகா்மன்ற திமுக உறுப்பினா்கள் குழு தலைவா் துரைசீனிவாசன் முன்னிலை வகித்தாா். நகா்மன்ற திமுக உறுப்பினா் ப.நந்தாதேவி பழனி வரவேற்றாா். நகா்மன்ற தலைவா் லட்சுமி பாரி அடிக்கல் நாட்டி பணியைத் தொடங்கி வைத்தாா்.
விழாவில் நகா்மன்ற உறுப்பினா்கள் சி.என்.அன்பு, சிட்டிபாபு, ரேவதி கன்னியப்பன், திமுக நிா்வாகிகள் ஏ.கே.பாரி, ஜெ.தமீன், கே.எம்.எஸ்.பழனி, ஆா்.மோகன்ராஜ், என்.ஜெயக்குமாா், பி.கன்னியப்பன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.