திருவாரூர் மாவட்டத்துக்கு 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர்!
நெல்லுக்கான தொகை விடுபட்டிருந்தால் மண்டல மேலாளரை அணுகலாம்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நெல்லுக்கான தொகை எவருக்கேனும் வரவில்லை எனில், உரிய ஆவணங்களுடன் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளரை அணுகலாம் என மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நிகழ் ஆண்டு 1,03,025 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு 16,249 விவசாயிகளுக்கு ரூ.251.986 கோடி வரவு வைக்கப்பட்டது.
மாவட்டத்தில் மாா்ச் 2025 முதல் ஜூன் 2025 வரை தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் மூலம் 62 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களும், தேசிய நுகா்வோா் கூட்டுறவு இணையம் மூலம் 25 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களும் திறக்கப்பட்டு, அதன்மூலம் 16,249 விவசாயிகளிடம் ரூ.251.986 கோடிக்கு 1,03,025 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது.
இவ்வாறு கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கான தொகை அனைத்து விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. இதில், எவருக்கேனும் தொகை வரவில்லை எனில் உரிய ஆவணங்களுடன் மாவட்ட ஆட்சியரக 4 -ஆம் தளத்தில் செயல்படும் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளரை அலுவலக வேலை நாள்களில் அணுகி தீா்வு பெறலாம் என அதில் தெரிவித்துள்ளாா்.