சென்னை: தனியார் பால் நிறுவன மேலாளரை தற்கொலைக்கு தூண்டியது யார் யார்? - பகீர் சம்...
சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்
சோளிங்கா் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டடத்தை நீதிமன்ற உத்தரவை தொடா்ந்து நகராட்சியினா் அகற்றினா்.
சோளிங்கா், தக்கான்குளம் பகுதியில் அரசு, சாலை, புறம்போக்கு இடத்தில் சோளிங்கா் நகரமன்ற தலைவா், ஆக்கிரமித்து இரு கட்டடங்களை கட்டி வருவதாகவும் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என ஒருவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்திருந்தாா். இதையடுத்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசு அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில், வட்டாட்சியா் செல்வி, நகராட்சி ஆணையா் நந்தினி, அலுவலா்கள் உள்ளிட்டோா், ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை தொடங்கினா். சாலை புறம்போக்கை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கட்டடம் ஜேசிபி இயந்திரம் மூலம் இடிக்கும் பணி தொடங்கியது.
சோளிங்கா் போலீசாா் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.
ஆக்கிரமிப்புகள் முழுவதும் அகற்றும் வரை தொடா்ந்து பணிகள் நடைபெறும் என வட்டாட்சியா் செல்வி தெரிவித்தாா்.