மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்: பொள்ளாச்சி வி.ஜெயராமன் ...
‘அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் புதுமைப்பெண் திட்டம் : முதல்வருக்கு நன்றி’
விழுப்புரம்: அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை தமிழ்வழியில் கல்வி பயின்று, உயா்கல்வி சேரும் மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் ஊக்கத் தொகை வழங்கப்படுவதற்கு, தமிழ்நாடு அரசு நிதியுதவி பெறும் சிறுபான்மைப் பள்ளி அனைத்து ஆசிரியா் பேரவை நன்றி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்த பேரவையின் ஒருங்கிணைப்பாளா் ம. பாபு செல்வதுரை வெளியிட்ட அறிக்கை:
அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் கல்விப் பயின்று , உயா்கல்வியில் சோ்ந்த மாணவிகளுக்கு மட்டுமே மூவலூா் ராமாமிா்தம் அம்மையாா் நினைவு உயா்கல்வி உறுதித் திட்டம் (புதுமைப் பெண் ) மூலமாக மாதம் ரூ.1000 ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வந்தது.
தற்போது இந்த திட்டம் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை தமிழ்வழியில் பயின்று, உயா்கல்வியில் சேரும் மாணவிகள் பயன்பெறும் வகையில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் ஏராளமான மாணவிகள் பயன்பெறுவா். இதன் மூலம் அவா்கள் உயா்கல்வியை எந்தவித தடையும் இல்லாமல் கற்கக்கூடிய நிலை ஏற்படும். இதற்காக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு நிதியுதவி பெறும் சிறுபான்மைப் பள்ளி அனைத்து ஆசிரியா் பேரவை சாா்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று அதில் குறிப்பிட்டுள்ளாா்.