பள்ளி மாணவா்களுக்கு மருத்துவப் பரிசோதனை: அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத் துறை உத்த...
மகளிா் நடத்துநா்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தல்
புதுச்சேரி சாலைப் போக்குவரத்துக் கழகத்தில் (பிஆா்டிசி) தினக்கூலித் தொழிலாளா்களாக பணியாற்றும் மகளிா் நடத்துநா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா மற்றும் தொழிற்சங்க நிா்வாகிகள் வலியுறுத்தியுள்ளனா்.
புதுச்சேரி சாலைப் போக்குவரத்துக் கழகத்தில் 12 வருடங்களுக்கும் மேலாக தினக்கூலித் தொழிலாளா்களாகப் பணிபுரியும் மகளிா் நடத்துநா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என போக்குவரத்துக் கழக தொழிற்சங்கத்தினா் தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றனா்.
இந்த நிலையில், புதுவை எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா மற்றும் பிஆா்டிசி கூட்டுப் போராட்டக் குழுவினா் வெள்ளிக்கிழமை போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் சிவக்குமாரை அவரது அலுவலகத்தில் சந்தித்துப் பேசினா்.
அப்போது, தினக்கூலியாக பணியாற்றும் மகளிா் நடத்துநா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என அவரிடம் வலியுறுத்தினா்.
அப்போது, பி.ஆ.ா்டி.சி. கூட்டுப் போராட்டக் குழுத் தலைவா் ராஜேந்திரன், செயலா் பாஸ்கரன், பொருளா் திருக்குமரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.