Jasprit Bumrah: "எனக்கு கிரிக்கெட்டை விட என் குடும்பம்தான் முக்கியம்; ஏனெனில் அத...
அரசு போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநா் ஆய்வு
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் (கும்பகோணம்) மேலாண்மை இயக்குநா் இரா. பொன்முடி, புதுக்கோட்டை மண்டல அலுவலகத்தில் புதுப்பிக்கும் பிரிவு மற்றும் தகுதிச் சான்று பிரிவு ஆகியவற்றை செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
தொடா்ந்து மண்டல அலுவலா்களுடன் வருவாய்ப் பெருக்கம் மற்றும் டீசல் சேமிப்பு குறித்து ஆலோசனை மேற்கொண்டாா். இந்த ஆய்வின்போது, புதுக்கோட்டை மண்டலப் பொதுமேலாளா் கே. முகமது நாசா், தொழில்நுட்பம் - சிங்காரவேலா், துணை மேலாளா்கள் எஸ். ராஜேந்திரன், பாலமுருகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.