அரசுப் பள்ளி பூட்டை உடைத்து கணினி திருட்டு
அரசுப் பள்ளி தலைமையாசிரியா் அறையின் பூட்டை உடைத்து கணினியைத் திருடிச் சென்றவா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
சென்னை வானகரம் நீலகண்ட முதலியாா் தெருவில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. பள்ளித் தலைமை ஆசிரியா் ராஜா (52), வியாழக்கிழமை காலை தனது அறையைத் திறக்க வந்தபோது, அறையின் பூட்டு
உடைக்கப்பட்டு உள்ளே மேஜையில் வைக்கப்பட்டிருந்த கணினி மற்றும் பொருள்கள் திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து வானகரம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.