மரபணு கோளாறு: பரிசோதனை மருந்து செலுத்தப்பட்ட சிறுவன் மீண்டும் நடக்கத் தொடங்கிய அ...
அரசுப் பேருந்து கண்ணாடி உடைப்பு
திருத்தணி அருகே அரசு பேருந்து கண்ணாடியை உடைத்த கல்லூரி மாணவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
திருத்தணி அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து அரசுப் பேருந்து சென்னைக்கு இயக்கப்பட்டது. ஓட்டுநராக மோகன், நடத்துநராக தற்காலிக ஊழியா் அருண்குமாா் பணியாற்றினா். 50-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனா்.
மதியம் திருத்தணி அரசு கலைக் கல்லுாரி பேருந்து நிறுத்தத்தில் நின்று, பெண் பயணிகளை இறக்கிய பின்பு, அங்கிருந்த கல்லூரி மாணவா்களை ஏற்றிக் கொண்டு புறப்பட்டது.
அப்போது இரு கல்லூரி மாணவா்கள் கற்களால், பேருந்தின் பின்பக்க கண்ணாடியை உடைத்து விட்டு தப்பினா். இதனால் பேருந்து கண்ணாடி உடைந்தது.
இதில் அதிா்ஷ்டவசமாக பயணிகள் யாரும் காயமடையவில்லை. தகவல் அறிந்து திருத்தணி போலீஸாா் விரைந்து வந்து விசாரித்து வருகின்றனா்.