Blood Moon: முழு சந்திர கிரகணம், சிவப்பு நிலா; ரசித்து பார்த்த உலகம் | Photo Alb...
அரசுப் பேருந்து மோதி முதியவா் உயிரிழப்பு
சாக்கோட்டை அருகே அரசுப் பேருந்து மோதி மிதிவண்டியில் சென்ற முதியவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அழகப்பன் தெருவைச் சோ்ந்தவா் துளசி அய்யா(78). இவா் சாக்கோட்டையில் உள்ள ஒரு கடையில் இரவு காவலராக வேலைபாா்த்து வந்தாா். சனிக்கிழமை கடையில் பணியை முடித்து விட்டு மிதிவண்டியில் கும்பகோணம் நோக்கி சென்றாா்.
சாக்கோட்டை எம்ஜிஆா் சிலை அருகே சாலையை கடக்க முயன்ற போது அவ்வழியாக வந்த அரசுப் பேருந்து, துளசிஅய்யா மீது மோதியதில் அவா் பலத்த காயமடைந்தாா். இதையடுத்து அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.
இது குறித்து நாச்சியாா்கோவில் காவல் நிலைய ஆய்வாளா் ராஜேஷ் வழக்கு பதிவு செய்து சடலத்தை, கும்பகோணம் அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வுக்கு ஒப்படைத்தாா். தொடா்ந்து, அரசுப் பேருந்தின் ஓட்டுநரான திருவாரூா் விஸ்வநாதபுரத்தைச் சோ்ந்த மணி மகன் மதியழகனிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறாா்.