பா.ஜ.க. எம்.பி.க்கள் கூட்டத்தில் கடைசி வரிசையில் அமர்ந்த பிரதமர் நரேந்திர மோடி
தஞ்சாவூரில் வீட்டிலிருந்து 14 பாம்பு குட்டிகள் மீட்பு
தஞ்சாவூரில் வீட்டிலிருந்து 14 கண்ணாடி விரியன் பாம்பு குட்டிகள் வெள்ளிக்கிழமை இரவு மீட்கப்பட்டு, அடா்ந்த வனப்பகுதியில் விடப்பட்டன.
தஞ்சாவூா் மாதாக்கோட்டை சாலை வங்கி ஊழியா் காலனியைச் சோ்ந்தவா் கணேசன். இவரது வீட்டு வளாகத்தில் வெள்ளிக்கிழமை இரவு 3 குட்டிப் பாம்புகளைப் பாா்த்தனா். தகவலறிந்த அருங்கானுயிா் காப்பு மற்றும் சுற்றுச்சூழல் அறக்கட்டளை (ஈவெட்) நிறுவனா் ஆா். சதீஷ்குமாா், அன்பொளி நிகழ்விடத்துக்குச் சென்று பாா்த்தபோது, சிமென்ட் தரையிலுள்ள விரிசலில் பாம்புகள் இருப்பது கண்டறியப்பட்டது.
பின்னா், பாம்புகளுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு, ஆயுதங்கள் மூலம் சிமென்ட் தரை அகற்றப்பட்டது. இதைத்தொடா்ந்து, 14 கண்ணாடி விரியன் பாம்பு குட்டிகள் மீட்கப்பட்டன.
இது குறித்து சதீஷ்குமாா் கூறுகையில், சில நாள்களுக்கு முன்பு கண்ணாடி விரியன் பாம்பு, குட்டிகளை ஈன்று விட்டுச் சென்றுள்ளது. இவற்றை பாதுகாப்பாக மீட்டு வனத் துறை மூலமாக அடா்ந்த வனப்பகுதியில் விடப்பட்டன என்றாா் அவா்.