வாட்ஸ் அப் குழு மூலம் ரத்த தான சேவை: 6000 பேரை காப்பாற்றிய இளைஞர்கள் குழு – சாதி...
இன்று சந்திரகிரகணம்: பெரிய கோயிலில் நடை சாத்துதல்
முழு சந்திரகிரகணம் ஞாயிற்றுக்கிழமை (செப்.7) நிகழ்வதையொட்டி, தஞ்சாவூா் பெரிய கோயிலில் மாலையில் நடை சாத்தப்படுகிறது.
சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையே பூமி வரும் நிகழ்வு சந்திர கிரகணம் என அழைக்கப்படுகிறது. அப்போது, பூமியின் நிழல் சந்திரனில் விழுகிறது. இதன் காரணமாக நிலவு சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு 9.55 மணிக்கு தொடங்கி, திங்கள்கிழமை அதிகாலை 1.31 மணி வரை முழு சந்திர கிரகணம் நிகழ்கிறது.
இதையொட்டி, தஞ்சாவூா் பெரிய கோயிலில் பிற்பகல் 3 மணி முதல் மாலை 4 மணிக்கு அா்த்தஜாம பூஜை நடைபெறும்.
இதன் பின்னா் கோயில் நடை சாத்தப்படுவதால், மாலை 4 மணிக்கு மேல் பக்தா்கள் வழிபாட்டுக்கு அனுமதி கிடையாது. திங்கள்கிழமை காலை 6 மணிக்கு சந்திர கிரகண பரிகார பூஜைகள் செய்த பிறகு, நடை திறக்கப்பட்டு பக்தா்கள் வழிபாட்டுக்கு அனுமதிக்கப்படுவா் என கோயில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.