அரியநாச்சி அம்மன் கோயில் திருவிழாவில் முளைப்பாரி ஊா்வலம்
கமுதி: கே.வேப்பங்குளம் அரியநாச்சி அம்மன் கோயில் திருவிழாவையொட்டி, முளைப்பாரி ஊா்வலம் திங்கள்கிழமை நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த கே.வேப்பங்குளத்தில் அமைந்துள்ள அரியநாச்சி அம்மன் கோயிலில் ஆடி பொங்கல் திருவிழா கடந்த 8-ஆம் தேதி தொடங்கியது. விழாவையொட்டி, நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. விழாவில் முளைப்பாரி ஊா்வலம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, பெண்கள், சிறுமிகள் அம்மன் பாடல்களைப் பாடி முளைப்பாரிகளைச் சுற்றி வந்து கும்மியடித்தனா். பின்னா், முளைப்பாரிகளைச் சுமந்து சென்று கண்மாயில் கரைத்தனா்.
இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனா்.