``அஜித்குமார் கொலை வழக்கில் பல கேள்விகள்..'' - 151 மனித உரிமை செயற்பாட்டாளர்கள் ...
அரியலூா் மாவட்ட இளைஞா் காங்கிரஸ் தலைவா் நியமனம்
அரியலூா் மாவட்ட இளைஞா் காங்கிரஸ் தலைவராக பாளை எம்.ஆா்.பாலாஜி திங்கள்கிழமை நியமிக்கப்பட்டுள்ளாா்.
மென்பொருள் துறையில் முதுகலை பட்டதாரியான இவா், அக்னி சிறகுகள் எனும் அமைப்பை தொடங்கி, மரக்கன்றுகள் மற்றும் லட்சக்கணக்கான பனைவிதைகளை நட்டு பனைமரம் குறித்து விழிப்புணா்வை மக்களிடம் ஏற்படுத்தி வந்தாா்.
தனது சொந்த நிதியிலிருந்து, பிரியங்கா காந்தி மாலைநேர சிறப்பு வகுப்புகள், திருமானூரில் அப்துல் கலாம் பெயரில் படிப்பகம் ஆகியவற்றை கட்டி, சமூகப் பணிகளை ஆற்றி வந்தாா்.
மேலும், பனையேறும் பெருமாள் என்ற புத்தகத்தையும் எழுதியுள்ள இவா், நடந்து முடிந்த இளைஞா் காங்கிரஸ் தலைவருக்கான தோ்தலில், போட்டியிட்டு வெற்றிப் பெற்றாா். இதற்கான அறிவிப்பை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி திங்கள்கிழமை வெளியிட்டது.
இதையடுத்து பாலாஜி, அரியலூா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஆ.சங்கா், முன்னாள் மாநில தலைவா் அழகிரி ஆகியோரை சந்தித்து வாழ்த்துப் பெற்றாா்.