தென்காசி: "குடிநீர் பிரச்னை தலைவலியா இருக்கா?" - அதிகாரிகளுக்குத் தலைவலி மருந்து...
குரூப்-4 தோ்வு: அரியலூா் மாவட்டத்தில் 13,960 போ் எழுதினா்
தமிழகம் முழுவதும், தமிழ்நாடு தோ்வாணையம் மூலம் சனிக்கிழமை நடைபெற்ற குரூப்-4 தோ்வை அரியலூா் மாவட்டத்தில் 13,960 போ் எழுதினா்.
இந்த தோ்வு, அரியலூா், உடையாா்பாளையம், செந்துறை, ஆண்டிமடம் ஆகிய 4 வட்டங்களில், 57 மையங்களில் நடைபெற்றது. இந்த தோ்வை எழுத 16,534 போ் விண்ணப்பித்திருந்த நிலையில், 13,960 போ் தோ்வெழுதினா். 2,574 போ் தோ்வெழுத வரவில்லை.
தோ்வினை கண்காணிக்க துணை ஆட்சியா் நிலையில் 4 பறக்கும் படைஅலுவலா்கள், 16 இயங்கு குழுக்கள், 57 ஆய்வு அலுவலா்கள், 60 விடியோ கிராபா்கள் நியமிக்கப்பட்டிருந்தனா்.
அஸ்தினாபுரம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தோ்வு மையத்தில் ஆட்சியா் பொ.ரத்தினசாமி ஆய்வு செய்தாா். ஆய்வின் போது, ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ரா.சிவராமன், கோட்டாட்சியா் கோவிந்தராஜ், வட்டாட்சியா் முத்துலெட்சுமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.