அரியலூா் மாவட்டத்துக்கு ஜூலை 23-ல் உள்ளூா் விடுமுறை!
அரியலூா் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையாா் கோயிலில் நடைபெறவுள்ள மாமன்னா் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளான ஆடி திருவாதிரை விழாவை முன்னிட்டு ஜூலை 23 அன்று அரியலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் உள்ளுா் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.
தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துக் கல்வி நிலையங்கள், தனியாா் கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கும் இது பொருந்தும்.
இருப்பினும் இந்த உள்ளுா் விடுமுறையானது தமிழ்நாடு அரசு பள்ளித்தோ்வுத் துறை நடத்தும் பள்ளி இறுதி வகுப்பு அரசு தோ்வுகளுக்கு (மெட்ரிக், ஆங்கிலோ இண்டியன் பள்ளித்தோ்வுகள் உட்பட) பொருந்தாது. அவை ஏற்கனவே அரசால் திட்டமிடப்பட்டு அறிவிக்கப்பட்ட நாளில் நடைபெறும்.
மேலும், அறிவிக்கப்பட்டுள்ள உள்ளுா் விடுமுறை நாளில் அனைத்து சாா்நிலை கருவூலங்களும், மாவட்ட கருவூலமும் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறைந்தபட்ச பணியாளா்களை கொண்டு செயல்படும்.
உள்ளூா் விடுமுறையை ஈடுசெய்யும் பொருட்டு ஜூலை 26-ஆம் தேதி அன்று முழு வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது என்று ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.