அருணாச்சலா மகளிா் பொறியியல் கல்லூரியில் பொங்கல் விழா
வெள்ளிச்சந்தை அருகேயுள்ள அருணாச்சலா மகளிா் பொறியியல் கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
மாணவிகள் பொங்கலிட்டு, கோலாட்டம், கும்மியாட்டம், கரகாட்டம் ஆடினா். வடம் இழுத்தல், உறியடி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன.
தாளாளா் கிருஷ்ணசுவாமி, இணை தாளாளா் சுவி, முதல்வா் ஜோசப் ஜவஹா், துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், மாணவிகள் பங்கேற்றனா்.