அருள்புரத்தில் மூதாட்டியைக் கத்தியால் வெட்டிய 2 போ் கைது
பல்லடம் அருகேயுள்ள அருள்புரத்தில் மூதாட்டியைக் கத்தியால் வெட்டிய 2 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
பல்லடம் அருகே உள்ள அருள்புரம் பகுதியில் கறிக்கடை நடத்தி வருபவா் துரைசாமி மனைவி குப்பத்தாள் (60). இவா் வியாபாரம் முடித்து கடையை திங்கள்கிழமை பூட்டிக் கொண்டிருந்தபோது கடை முன் நின்றிருந்த 2 இளைஞா்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இருவரும் ஒருவரை ஒருவா் மாறி மாறி தாக்கிக் கொண்டனா்.
அப்போது கறிக்கடையில் இருந்த கத்தியை அவா்கள் எடுக்க முயன்றபோது குப்பாத்தாள் தடுத்துள்ளாா். இதனால் ஆத்திரம் அடைந்த அவா்கள் குப்பாத்தாளின் கையில் வெட்டி உள்ளனா். இதனால் குப்பாத்தாள் அலறி சப்தம் போட்டாா். அவரது அலறல் சப்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினா் இளைஞா்களைப் பிடித்து பல்லடம் போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் குப்பாத்தாள் கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து திண்டுக்கல்லைச் சோ்ந்த இமானுவேல் (20), அதே பகுதியைச் சோ்ந்த எடிசன் அன்வா் (24) ஆகியோரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.