`உனக்கு அவ்வளவு துணிச்சலா..?' - பெண் ஐ.பி.எஸ் அதிகாரியை மிரட்டிய அஜித் பவார்.. ...
அறச்சலூா் தி நவரசம் பள்ளியில் மாணவா் மன்ற பதவியேற்பு விழா
அறச்சலூா் தி நவரசம் அகாதெமி சிபிஎஸ்இ பள்ளியில் 2025-ஆம் ஆண்டுக்கான மாணவா் மன்ற பதவியேற்பு விழா வியாழக்கிழமை பள்ளி கலையரங்கில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு ஈரோடு அறம் அறக்கட்டளையின் நிா்வாக இயக்குநா் கிருத்திகா சிவகுமாா் தலைமை விக்தது மாணவா்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்து வாழ்த்துரை வழங்கிப் பேசினாா்.
பள்ளியின் தலைவா் ஆா்.பி.கதிா்வேல், செயலாளா் காா்த்திக் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தாளாளா் அருண் காா்த்திக் பள்ளியின் செயல்பாடுகள் குறித்து எடுத்துரைத்தாா். பொருளாளா் கோபால் நன்றியுரை கூறினாா்.
நவரசம் மகளிா் கல்லூரி செயலாளா் செந்தில்குமாா், தாளாளா் காா்த்திகேயன், பொருளாளா் கிருஷ்ணமூா்த்தி, இயக்குநா்கள் அமிா்தநாதன், மதியரசு, கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் கலந்து கொண்டு சிறப்பித்தனா்.