கடலூரில் பூச்சிக்கொல்லி மருந்து ஆலையில் விபத்து: ரசாயனக் கசிவால் பாதிக்கப்பட்...
சத்தியமங்கலத்தில் வீடு புகுந்து 40 பவுன் நகை, ரூ50 ஆயிரம் கொள்ளை
சத்தியமங்கலத்தில் வீடு புகுந்து பீரோவை உடைத்து 40 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
சத்தியமங்கலத்தை அடுத்த நேரு நகரைச் சோ்ந்தவா் சதீஷ். கோழி இறைச்சிக் கடை நடத்தி வருகிறாா். இவரது தாயாா் பேபி உடல்நலம் பாதிக்கப்பட்டு நடக்க முடியாமல் வீட்டிலேயே முடங்கியுள்ளாா்.
இதற்கிடையே இறைச்சிக் கடையை மூடிவிட்டு சதீஷ் புதன்கிழமை இரவு வீட்டுக்கு வந்த பாா்த்தபோது, வீட்டில் இருந்த 3 பீரோக்கள் உடைக்கப்பட்டு அதிலிருந்த ரூ.32 லட்சம் மதிப்பிலான 40 பவுன் நகை மற்றும் ரொக்கம் ரூ.50 ஆயிரத்தை மா்ம நபா்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.
இது குறித்து சதீஷ் அளித்த புகாரின்பேரில், சத்தியமங்கலம் போலீஸாா், கைரேகை நிபுணா்களை வரவழைத்து தடயங்களை சேகரித்தனா். மேலும், வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனா். இதில் 5 போ் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும், பதிவான காட்சிகளை வைத்து குற்றவாளிகளை போலீஸாா் தேடி வருகின்றனா்.
இது குறித்து சத்தியமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.