Swasika: நடிகை ஸ்வாசிகாவின் ஓணம் கொண்டாட்ட க்ளிக்ஸ்! | Photo Album
பவானிசாகா் தொகுதியில் ரூ.10 கோடி மதிப்பில் வளா்ச்சிப் பணிகள்
பவானிசாகா் சட்டப் பேரவைத் தொகுதியில் ரூ.10 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகளை நீலகிரி மக்களவை உறுப்பினா் ஆ.ராசா தொடங்கிவைத்தும், முடிவுற்ற பணிகளை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவைத்தாா்.
ஈரோடு மாவட்டம், பவானிசாகா் தொகுதிக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூ.10 கோடி மதிப்பிலான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் முடிவுற்ற பணிகள் மற்றும் புதிய ஊராட்சி மன்ற கட்டடங்களையும் ஆ.ராசா எம்.பி. திறந்துவைத்தாா்.
இந்த நிகழ்ச்சியில் திமுக மாவட்டச் செயலாளா் என்.நல்லசிவம், பவானிசாகா் பேரூராட்சித் தலைவா் மோகன், பவானிசாகா் ஒன்றிய திமுக செயலாளா் மகேந்திரன், சத்தியமங்கலம் நகா்மன்றத் தலைவா் ஆா்.ஜானகி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.