பாபர் அசாம் மீதான விமர்சனங்கள் சரியானவை: பாக். முன்னாள் வீரர்
அறை முழுக்க சிகரெட் பாக்கெட், கஞ்சா புகை... மாணவியை விடுதியில் இருந்து நீக்கிய டாடா கல்லூரி
ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் இருந்து போதைப்பொருள் மும்பைக்கு சட்டவிரோதமாக கடத்தப்பட்டு வருவதால், மும்பையில் போதைப்பொருள் பழக்கம் அதிகரித்து விட்டது. பாலிவுட் பிரபலங்கள் கூட இந்த விவகாரத்தில் கைதாகிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மும்பை தேவ்னார் பகுதியில் உள்ள டாடா சோசியல் சயின்ஸ் கல்லூரி நாடுமுழுவதும் பிரபலமானது. இங்கு படிக்கும் மாணவிகளுக்காக பிரத்யேகமாக 3 விடுதிகள் உள்ளது.
இந்த விடுதியில் வசிக்கும் மாணவி ஒருவர் தனது வார்டனிடம் தன்னை வேறு அறைக்கு மாற்றும்படியும், தனது அறை எப்போது புகை நிரம்பி மிகவும் அழுக்காக இருப்பதாகவும், தனது அறையில் இருக்கும் மாணவி மிகவும் அசுத்தமாக இருப்பதாகவும் புகார் செய்திருந்தார். அப்புகாரை தொடர்ந்து பேராசிரியர் ஒருவர் மற்றொரு ஊழியருடன் சேர்ந்து அந்த அறையை சோதனை செய்தார்.

அங்கு காலி சிகரெட் பாக்கெட், ரோலிங் பேப்பர், மாணவியின் பேக்கில் கஞ்சா போன்றவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த பேராசிரியர் அந்த அறைக்கு சீல் வைத்தார். இது குறித்து விசாரிக்க உயர்மட்டக்கமிட்டி அமைக்கப்பட்டது. இக்கமிட்டி சம்பந்தப்பட்ட மாணவியை அழைத்து விசாரணை நடத்தியது. தன் மீதான குற்றச்சாட்டை மறுத்த மாணவி தனது பேக்கில் யாரோ கஞ்சாவை வைத்துவிட்டதாக தெரிவித்தார். இதையடுத்து அம்மாணவி விடுதியில் இருந்து நீக்கப்பட்டார். அதோடு போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக போலீஸில் புகார் செய்யப்பட்டது.
அதன் அடிப்படையில், போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யபட்டுள்ளது. மாணவி படிப்பை தொடர அனுமதிப்பது என்றும், போலீஸாரின் விசாரணை அறிக்கை அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது என்றும் கல்லூரி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.