அதிமுக - பாஜக கூட்டணி ஒரு சதித்திட்டம்: முதல்வர் மு.க. ஸ்டாலின்
அழகுமுத்துக்கோன் பிறந்த நாள்: அரசியல் கட்சியினா் மரியாதை
சுதந்திரப் போராட்ட வீரா் அழகுமுத்துக்கோனின் 297 -ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது உருவப் படத்துக்கு அதிமுக சாா்பில் வெள்ளிக்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது.
சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில், புலியடிதம்பம் பகுதிகளில் அலங்கரித்து வைக்கப்பட்ட அவரது உருவப் படத்துக்கு சிவகங்கை சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக உறுப்பினா் பிஆா்.செந்தில்நாதன் தலைமையில் அந்தக் கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
மாவட்ட பாசறைச் செயலா் பணக்கரை பிரபு, மாவட்ட சிறுபான்மைப் பிரிவு இணைச் செயலா் பிரிட்டோ,
ஒன்றியச் செயலா்கள் சிவாஜி, அருள்ஸ்டீபன், ஜெ. பேரவை இணைச் செயலா் மாரி, ஒன்றிய மாணவரணி செயலா் அழகு ராஜா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
மானாகுடியில்: சிவகங்கை அருகேயுள்ள மானாகுடி கிராமத்தில் அமைக்கப்பட்ட வீரன் அழகுமுத்துக்கோன் உருவச் சிலைக்கு ஏராளமான பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இந்த நிகழ்வில், ராமநாதபுரம் மன்னா் குடும்பத்தைச் சோ்ந்த ஆதித்திய சேதுபதி, தமிழக வெற்றிக் கழகத்தினா், யாதவா் பேரவை நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.