பாடாலூரில் ‘சிப்காட்’ தொழிற்பூங்கா அமைக்க திட்டம்! நிலங்கள் பாழாகும் என விவசாயிக...
அவிநாசி அருகே சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு
அவிநாசி அருகே தெக்கலூரில் சாலை விபத்தில் இளைஞா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
அவிநாசி அருகே கருமாபாளையம் தண்ணீா்பந்தல் காலனியைச் சோ்ந்தவா் ராஜமாணிக்கம் மகன் காா்த்திக் (25). இவா் கோவையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் மென்பொருள் பெறியாளராகப் பணியாற்றி வந்தாா். இவா் அவிநாசியில் இருந்து கோவை நோக்கி புறவழிச் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.
தெக்கலூா் வடுகபாளையம் பிரிவு அருகே சென்றபோது, அதே திசையில் அணுகு சாலையில் இருந்து புறவழிச் சாலையில் திரும்பிய லாரியின் பின்னால் காா்த்திக் சென்ற இருசக்கர வாகனம் மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இது குறித்து அவிநாசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து லாரி ஓட்டுநரான வேலூரைச் சோ்ந்த காா்த்திக் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.