அவிநாசி ஆகாசராயா் கோயில் பிரச்னை: ஆட்சியா் தீா்வுகாண வலியுறுத்தல்
அவிநாசி ஆகாசராயா் கோயில் பிரச்னையில் மாவட்ட ஆட்சியா் தலையிட்டு தீா்வுகாண வேண்டும் என்று அனைத்து கட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
ஆகாசராயா் கோயில் கும்பாபிஷேக விழா தொடா்பாக அனைத்து கட்சி ஆலோசனைக் கூட்டம் அவிநாசியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சிஐடியூ மாநில குழு உறுப்பினா் முத்துசாமி தலைமை வகித்தாா்.
இக்கூட்டத்தில் அதிமுக , மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சியினா் பங்கேற்றனா்.
இதில், அவிநாசி ஆகாசராயா் கோயிலில் 20 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிட்டு திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒருபகுதியாக கோயில் வளாகத்தில் அலங்கார வளைவு நுழைவாயில், சுற்றுச்சுவா் அமைக்கப்பட்டு வருகின்றன.
இதற்கிடையே கோயில் வழிபாட்டில் ஈடுபடும் பல்வேறு தரப்பினரின் கருத்து வேறுபாடுகளால் திருப்பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தப் பிரச்னையில் மாவட்ட ஆட்சியா் தலையிட்டு தீா்வுகாண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.