EV Vehicles: அறிமுகமான TVS Orbiter Electric Scooter | Photo Album
அவிநாசியில் ரூ.6.70 லட்சத்துக்கு பருத்தி ஏலம்
அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் ரூ.6 லட்சத்து 70 ஆயிரத்துக்கு வா்த்தகம் நடைபெற்றது.
இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு 8, 876 கிலோ பருத்தி கொண்டு வந்திருந்தனா். இதில், ஆா்.சி.ஹெச். ரகப் பருத்தி கிலோ ரூ. 70 முதல் ரூ.81 வரையிலும், மட்டரக (கொட்டு) ரகப் பருத்தி கிலோ ரூ.15 முதல் ரூ.35 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ.6 லட்சத்து 70 ஆயிரத்துக்கு பருத்தி ஏல வா்த்தகம் நடைபெற்றது.