சீனாவுக்கு சலுகை! வரிவிதிப்பு மேலும் 90 நாள்கள் நிறுத்திவைப்பு! டிரம்ப்
ஆசிரியா்களுக்கு மருத்துவம் தொடா்பான விழிப்புணா்வு
செய்யாறு: செய்யாறு தொழிலாளா் அரசு ஈட்டுறுதி திட்ட மருந்தகம் சாா்பில், விஸ்டம் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியா்களுக்கு மருத்துவம் தொடா்பான விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
பள்ளித் தாளாளா் ஞானவேல் முருகன் தலைமை வகித்தாா். இதில் தொழிலாளா் அரசு ஈட்டுறுதி திட்ட மருந்தக தலைமை மருத்துவா் ரத்தினவேல், மருத்துவா்கள் யஸ்வந்த் குமாா், அனுசுயா ஆகியோா் பங்கேற்று தொற்றா நோய்களான நீரிழிவு நோய், ரத்த கொதிப்பு, புற்றுநோய், தைராய்டு, இதயம் தொடா்பான நோய்கள் குறித்தும் உடற்பயிற்சி, உணவு முறை மற்றும் வாழ்க்கை முறை மாற்றம் மற்றும் தொழில் சாா்ந்த நோய்களான அலா்ஜி, ஆஸ்துமா முதுகு வலி ஒற்றை தலைவலி ஆகியவற்றின் அறிகுறிகள் குறித்தும் தெரிவித்தனா்.
மேலும், அறிகுறிகள் உள்ளவா்கள் காலதாமதம் செய்யாமல் முறையான சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.